Apple Pay

உங்கள் Apple சாதனத்தைப் பயன்படுத்தி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கான பாதுகாப்பான மற்றும் தனியுரிமையான வழியாகும். உங்கள் iPhone, iPad, Mac, Apple Watch மற்றும் Apple Vision Pro சாதனங்களில் உங்கள் கிரெடிட், டெபிட் அல்லது பிரீபெய்டு கார்டுகளைச் சேர்த்து இதைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.

அமெரிக்காவில் Apple Pay சேவையை Apple Inc. நிறுவனத்தின் துணை நிறுவனமான Apple Payments Services LLC வழங்குகிறது. பிற நாடுகள் மட்டும் வட்டாரங்களில், Apple Pay சேவையைக் குறிப்பிட்ட சில Apple துணை நிறுவனங்கள் வழங்குகின்றன. இதன் விவரங்கள் Apple Pay தனியுரிமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. Apple Inc., Apple Payments Services LLC மற்றும் Appleஇன் துணை நிறுவனங்கள் இவை எதுவுமே வங்கி இல்லை. Apple Payஇல் பயன்படுத்தப்படும் கார்டுகள் அனைத்துமே கார்டு வழங்குநரால் வழங்கப்படுபவை.